Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி அளிக்கும் அஜித்! வைரல் போட்டோஸ்

Advertiesment
அஜித்
, திங்கள், 12 நவம்பர் 2018 (20:20 IST)
நடிகர் அஜித் ஆளில்லா விமானங்கள் இயக்குவதில் வல்லவர் ஆவார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்களை பல்வேறு இடங்களில் இயக்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். 
 
இதற்காக தக்‌ஷா என்னும் குழுவை மாணவர்கள் உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசனை வழங்கி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் ஆலோசனை வழங்கி வரும் தக்‌ஷா அணிக்கு சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. 
அஜித்

 
இந்நிலையில் தக்‌ஷா குழுவின் புதிய ஆளில்லா விமான திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு அஜித் வந்துள்ளார். அப்போது அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நடுவே இருக்கும் அஜித் புகைப்படங்கள் மற்றும் அவர் ஆளில்லா விமானத்தை இயக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
அஜித்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப் ஸ்டார் பிரசாந்துக்கா இந்த நிலைமை.... ரசிகர்கள் குமுறல்