விஸ்வாசம் படத்துக்கு பின் அஜித் யாருடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் பரவின.
அஜித்திடம் வினோத் சொன்ன ஒன்லைன் கதை பிடித்து விட்டதாகவும், அதனால் அந்த கதையில் நடிக்க அஜித் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் ரீமேக் படத்தை இயக்க சொன்னதால் அஜித் படத்திலிருந்து வினோத் வெளியேறிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்து தகவல் இல்லை.