நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாருக்கு, இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் உயரிய விருதான 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க விருதானது, இத்தாலியில் உள்ள பிலிப் சாரியோல் மோட்டார்ஸ்போர்ட் அமைப்பின் சார்பில் அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு அப்பால் கார் ரேஸிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அஜித், சர்வதேச அளவில் பல பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.
இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். "தொழில்முனைவோரும், கார் ரேஸருமான பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான 'ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது' வென்ற என் கணவரின் அருகில் நிற்பதில் பெருமை கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு, விழாவின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதையும் அஜித் வென்றது குறிப்பிடத்தக்கது.