Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டைத் தலையுடன் காணப்பட்ட அஜித்… இதுதான் வலிமை கெட்டப்பா?

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:38 IST)
நடிகர் அஜித் இன்று சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு செல்ல இருந்த நிலையில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் தொல்லை செய்து வந்த நிலையில், யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித் சென்றார். அவரை கண்டதும் உடனடியாக சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அந்த புகைப்படங்களில் அஜித் மொட்டை அடித்து அதை மறைக்க தொப்பி போட்டிருந்தார். இந்த மொட்டைத் தலை கெட்டப் வலிமை படத்துக்காக போடப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்தின் புகைப்படம் வெளியாக அதிலும் அவர் மொட்டைத் தலையுடன் காணப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments