Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விடாமுயற்சி'' படத்திற்காக 10 கிலோ எடை குறைக்கும் அஜித்?

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (21:56 IST)
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக அவர் 10 கிலோ வரை எடை குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர்  அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நடிகர் அஜித் தன்  62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். சமீபத்தில் பைக் ரைடிங் சென்ற அஜித்தின் புகைப்படம் வைரலான நிலையில், இப்படத்திற்கான ஃபிட்டான தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே அஜித் விடாமுயற்சி படத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில்,  விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் பற்றிய தகவலை இயக்குநர் மகிழ்திருமேனி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 3  ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் 62 படத்திற்காக 10 கிலோ எடை வரை குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த பட ஷுட்டிங்கில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 அனேகமாக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் பூஜை தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments