Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
அஜித் ஹெச் வினோத் இயக்கும் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட ‘அஜித் 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments