நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு 5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
சமீபத்தில் கோல்ட் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், ரசிகர்களிடம் படத்தைக் காட்டுவதற்காக படக்குழு கடினமாக உழைத்து வருவதாகவும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தைப் பற்றி ரசிகர் ஒருவருக்கு அளித்த விளக்கத்தில் அல்போன்ஸ் “KGF அல்லது விக்ரம் போன்ற படத்தை கோல்டில் எதிர்பார்க்காதீர்கள். இந்த படத்தில் ஒரு துப்பாக்கிக் கூட இல்லை. நேரம் மற்றும் பிரேமம் போலவும் இந்த படம் இருக்காது. இந்த திரைப்படம் அதற்கான தனி பாணியில் இருக்கும். இந்த படத்துக்காக 40 புதிய கதாபாத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்” என்று கூறியுள்ளார்.