லடாக் அருகே படப்பிடிப்பு செய்த போது அந்த பகுதிகளை அசுத்தப்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் லட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் தேர்வானார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகிவிட இப்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் கார்கில் போர் பற்றி காட்சிகளாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் ராணுவ வீரர்களாக கார்கில் போரில் சண்டையிடுவதாகவும், அதில் அமீர்கானின் நண்பரான நாக சைதன்யா இறந்துவிடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இந்த காட்சிகளை லடாக் அருகே ஒரு கிராமத்தில் படம்பிடித்துள்ளனர் படக்குழுவினர். ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அந்த பகுதியை அசுத்தமாக அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதை அமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.