நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசு கொரோனா லாக்டவுன் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ளது. அந்த வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 78 வயதாகும் அமிதாப் பச்சன் தன் ரசிகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதில் ‘அரசு 50 வயதுக்குள் உள்ளவர்கள்தான் வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லியுள்ளது. இதனால் 78 ஆவது வயதில் எனது வேலைக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் இருக்கும் திரைப்பட அமைப்பு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்குகள் எல்லாம் நீண்ட காலம் நடக்கும். எனவே இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன். ஒருவேளை வயது வரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் வேறு ஏதாவது வேலை இருக்குமா? என உத்தேசித்து சொல்லுங்கள்’ என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் சமீபத்தில்தான் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.