Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அண்ணாத்த’ படத்தின் புதிய லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (18:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமன்றி நாளை மாலை மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அண்ணாத்த’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் அட்டகாசமாக கையில் அரிவாள் வைத்தபடி இருக்கும் போஸ் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments