சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தென்னிந்தியாவில் நடிகராக அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஓடிடி நிறுவனங்கள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “நாங்கள் ஆரம்பத்தில் சேக்ரட் கேம்ஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற சீரிஸ்களை நெட்பிளிக்ஸ்க்காக உருவாக்கினோம். ஓடிடிகளை நாங்கள் ஒரு நல்ல வாய்ப்பு எனக் கருதினோம். ஆனால் கோவிட்டுக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. அவர்கள் இப்போது தொலைக்காட்சியை விட மோசமாகிவிட்டார்கள்.
நெட்பிளிக்ஸ், அமேசான் என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவைப்படும் டேட்டா. 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் அவர்கள் தங்கள் சந்தாதாரர்களை அதிகப்படுத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் தற்போது சினிமாவை உருவாக்குவதில்லை. அவர்கள் உருவாக்குவதெல்லாம் வெறும் கண்டெண்ட்தான். ” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.