Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்தில் ஆபாச கமெண்ட் – சரியான பதிலடி கொடுத்த நடிகை!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (10:39 IST)
நடிகை அபர்ணா ரவியின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நபர் ஒருவருக்கு அவர் சரியான பதிலடிக் கொடுத்துள்ளார்.

நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரும்போது அதில் சில மர்ம ஆசாமிகள் ஆபாசமான கமெண்ட்களை இடுவது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் நடிகை அபர்ணா ரவி தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிய அதில் அஜித்குமார் என்ற நபர் ஒருவர் ஆபாசமாகவும், வக்ரமாகவும் கமெண்ட் செய்திருந்தார்.

இதையடுத்து அவரது ஐடியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த அபர்ணா ‘உங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறீர்கள். அவரை டைட்டாக கட்டி பிடித்து புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போல், நானும் ஒருவருக்கு மகள் என்பதை  முதலில் மனதில் வையுங்கள். நான் இந்த பக்கத்தில் எனது வேலைகளை புரமோட் செய்ய வருகிறனே தவிர, உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை அளிப்பதற்கு அல்ல" எனக் கூறியிருந்தார். அபர்னாவின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments