தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது கொரொனா தொற்று. இதைத்தடுக்க தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.
தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடிகர் சிவக்குமார்- சூர்யா - கார்த்தி குடும்பத்தினர்
இணைந்து ரூ.1 கோடி நிவாரண நிதியை ஸ்டாலினிடன் வழங்கினர். இதையடுத்து, இன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ரூ. லட்சத்திற்காக காசோலையை முதல்வர் ஸ்டாலிடம் வழங்கினார். அதேபோல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
இன்று திமுக கட்சி சார்பில் ரூ.1 கோடி கொரொனா நிவாரண நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.