Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில்,“பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

J.Durai
திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:22 IST)
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி,   பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  படக்குழுவினர் கலந்துகொள்ள,  கல்லூரி மாணவர்கள் முன்னிலையில்,  கோலாகலமாக வெளியிடப்பட்டது. 
 
எஸ் ஆர் எம்  கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. .
இவ்விழாவினில்
 
தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது......
 
GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், நல்லதொரு குழுவின் உழைப்பில், மிக சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. இப்பட டீம் அனைவருக்கும் என் நன்றிகள். கதை கேட்டபோதே மிகவும் பிடித்தது. மாணவர்கள் மத்தியில் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மகிழ்ச்சி. இமான் சார் சிறப்பான இசையை தந்துள்ளார். படம் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி. 
 
பூவையார் பேசியதாவது…..
 
எனக்கு வாய்ப்பளித்த விஷால் அண்ணாவிற்கு நன்றி. அர்ஜூன் அண்ணாவுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறேன் அது தான் என்னை இங்கு வரை கூட்டி வந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி
 
நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசியதாவது.....
 
இயக்குநர் விஷால்  ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார், நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அர்ஜூன் என் ஃபேவரைட் கோ ஸ்டார். எங்கள் டீம் சார்பாக உங்களுக்கு நன்றி.நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். பயங்கரமான  பாடல்கள் தந்துள்ளார். படமும் மிக அட்டகாசமாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. 
 
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது......
 
இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன் இப்போது உங்கள் முன்னால் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி. பாம் ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும், ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். 
அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி, இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார், அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா உங்களுக்கும் நன்றி. GEMBRIO நிறுவனத்திற்கு என் நன்றிகள். எங்கள் இளம் குழுவிற்கு ஆதரவைத் தரும் உங்கள்  அனைவருக்கும் நன்றி.
 
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது......
 
உங்கள் கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள். பாம் ரொம்பவும் சுவாரஸ்யமான படம், 
GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே பிடித்தது உடனே ஒப்புக்கொண்டேன். விஷால் இன்னும் நல்ல படங்கள் செய்வார் பெரிய இடத்திற்கு செல்வார். அர்ஜுன் தாஸ் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா உங்கள் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள், இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார், படம் மிக  நல்ல படமாக வந்துள்ளது. மேஜிக்கல் எண்டர்டெயினராக இருக்கும். தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.  
 
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது......
 
பாம் மிக ஸ்பெஷலான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார்  இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் எனறு கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். 
GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், இன்னும் நிறைய நல்ல படம் செய்ய வாழ்த்துக்கள். இந்தப்படம் மிக ஜாலியான படமாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments