Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸ் பணிகளை தொடங்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படக்குழு!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில்,  நீலம் புரடெக்சன் சார்பில், தினேஷ் நடிப்பில், ஆதிரை இயக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்குத் தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகும் அட்டகத்தி தினேஷ் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன் மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments