Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் மில்லர் & அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

கேப்டன் மில்லர் & அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth

, சனி, 3 பிப்ரவரி 2024 (08:14 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அதே நாளில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான  கேப்டன் மில்லர் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இரு படங்களுமே கலவையான விமர்சனங்களையும் சுமாரான வசூலையும் பெற்றன.

இந்நிலையில் இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கேப்டன் மில்லர் திரைப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அயலான் திரைப்படம் விரைவில் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவனம் ஈர்க்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்!