நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள எ சூட்டபிள் பாய் தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன. உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அடுத்து நெட்பிளிக்ஸை தடை செய்ய வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
நெட்பிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய தொடரான எ சூட்டபிள் பாய் வெளியானது. அதில் ஒரு காட்சியில் கோயிலுக்குள் இருக்கும் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது போல காட்சியமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கூறு நெட்பிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவுகள் மற்றும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியுள்ளனர்.