Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகணும்… விஜய் கறார்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:10 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என சொல்லப்பட்டதால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு (2014 ஆம் ஆண்டில் வீரம், ஜில்லா) விஜய் அஜித் படங்கள் மோதல் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இடையில் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப்போவதால் பீஸ்ட் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பீஸ்ட் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் விஜய் கண்டிப்பாக தன்னுடைய படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடம் கறாராக சொல்லிவிட்டதுதான் காரணமாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments