Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…இரண்டு தளங்களில் ஒரே நாளில்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (08:49 IST)
பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அந்த படத்தின் ஓடிடி பிரீமியர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த படம் ரிலீஸானது. ஆனால் ரிலீஸானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று, இணையத்தில் ட்ரோல் ஆனது.

இந்நிலையில் இப்போது இந்த படம் பெரும்பாலான திரைகளில் இருந்து தூக்கப்பட்டு விட்ட நிலையில், ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கழித்து நெட்பிளிக்ஸ், மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் வரும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments