Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்கழி திங்கள் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மார்கழி திங்கள் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:37 IST)
தாஜ்மஹால் படத்தின்  மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் கதாநாயகனாக வரமுடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனர் ஆகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோப்ர் 27 ஆம் தேதி  இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளைக் கதாநாயகி ஆக்கி படம் இயக்கும் லிவிங்ஸ்டன்!