பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து ராஜுவின் நடவடிக்கைகள் மற்றும் அவரின் டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் அவருக்கு மளமளவென ரசிகர்கள் பெருகினர். இதையடுத்து திடீரென சக போட்டியாளர்கள் அவர் மீது வெறுப்பை காண்பிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் நேற்று தனித்தன்மை இழந்த போட்டியாளர்கள் என அண்ணாச்சி மற்றும் ராஜு முன்னிறுத்தப்பட்டனர். அவர்ளுக்கு பிக்பாஸ் தண்டனை கொடுத்தார். தற்போது பிக்பாஸில் ராஜு காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல் அறிவித்ததும் அவருக்கு கரகோஷங்கள் எழுந்தது.