Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை வனிதாவுக்கு 3 வது திருமணம்!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:26 IST)
தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன் பின்னர் ஒருசில படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.

இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா விஜயகுமார், ஆனந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2010ம் ஆண்டு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்

இந்த நிலையில் சமீபத்தில் ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். முதலில் வனிதாவின் படபடப்பான பேச்சை கேட்டு ரசிகர்கள் அவரை வெறுத்தாலும் அவருடைய பேச்சில் இருந்த நியாயத்தை தாமதமாக புரிந்து கொண்டதால் அவருக்கு புகழ் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா விஜயகுமார் மூன்றாம் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு மூன்றாவது திருமணம் எளிய முறையில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  வனித விஜயகுமார்  வரும் ஜூன் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு  பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் இந்த தகவலை  அவரே உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments