Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் வெற்றி படமா? தோல்வி படமா?... தயாரிப்பாளர்கள் சொல்வதின் பின்னணி என்ன?

Webdunia
புதன், 27 மே 2020 (08:57 IST)
விஜய் நடித்து கடைசியாக வெளியான படமான பிகில் படம் தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் கொடுத்துள்ளதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் தயாரிப்புத் தரப்போ தங்களுக்கு படத்தைத் தயாரித்ததில் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டுகிறதாம். இது விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் படத்தின் பட்ஜெட் எகிறியதால், எதிர்பார்த்த அளவுக்கான லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.  இதனால் படத்தைத் தயாரித்த ஏ ஜி எஸ் நிறுவனம் நஷ்டம் என்று சொல்லி விஜய்யிடம் மீண்டும் கால்ஷீட் பெற்று மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று அந்த நிறுவனம் ஆசைப்படுகிறதாம். அதற்காகதான் இந்த நஷ்ட செய்தி என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments