Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு ப்ளுசட்டை மாறன் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்..!

திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு ப்ளுசட்டை மாறன் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்..!
, ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (09:46 IST)
ப்ளூ சட்டையை மக்கள் அவாய்ட் பண்ணி விடுவார்கள் என திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் பேட்டி அளித்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். அந்த கேள்விகள் பின்வருமாறு:
 
கொரோனா நேரத்தில் மாஸ்டர் படம் வெளியானது. அப்போது 50% பேர் மட்டுமே தியேட்டரில் அனுமதி என்று அரசாங்கம் ஆணையிட்டு இருந்தது.
 
ஆனால் உங்கள் தியேட்டரில் ஒரு காட்சிக்கு 100% டிக்கட் விற்றீர்களா? அதாவது 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் நிர்ணயித்த டிக்கட்டின் விலையை விட இரண்டு மடங்கு பணம் தந்து வாங்கினார்களா?.
 
இது பற்றி உங்களிடம் யூ ட்யூப் மற்றும் செய்தி சேனல்கள் சேனல்கள் கேள்வி கேட்டன. அதற்கு நீங்கள் சொன்ன பதில்:
 
பக்கத்துக்கு சீட்டில் ஹாண்ட்பேக் உள்ளிட்ட பொருட்களை படம் காண்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் இருமடங்கு விலையில் டிக்கட் விற்கிறோம்.
 
கேள்விகள்:
 
1. இது நீங்கள் கூறியதுதானா  அல்லது உங்களைப்போன்ற உருவத்தில் வேறு யாரோ கூறியதா அல்லது உங்கள் குரலை மாற்றி எடிட் செய்து வெளியிட்டார்களா?
 
2. அரசாங்கம் அனுமதித்ததை விட இருமடங்கு விலைக்கு டிக்கட் விற்றது சட்டப்படி குற்றமா இல்லையா?
 
3. ஹாண்ட்பேக் உள்ளிட்ட உடமைகளை வெளியே செக் செய்து அனுப்புவது அல்லது அதற்கென உள்ள அலமாரியில் வைப்பதுதானே நியாயம்? இது என்ன உலகில் இல்லாத அதிசயமாக.. அவற்றை வைக்க தனியே ஒரு சீட்டை தியேட்டருக்குள் ஒதுக்கி, அதற்கும் இன்னொரு டிக்கட்டை விற்க வேண்டும்?
 
செய்தி அல்லது யூட்யூப் சேனல்களுக்கு தைரியம் இருந்தால் இக்கேள்விகளை அவரிடம் எழுப்பி 'நியாயமான' பதிலை வீடியோ பேட்டி மூலம் பெற்றுத்தாருங்கள். உண்மையை சொல்கிறாரா அல்லது மழுப்புகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள் ஐயா. காலம் யாரை ஒதுக்கி தள்ளும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
 
என் விமர்சனம் உண்டு. நான் உண்டு என்றுதான் இருந்தேன். என் பட ரிலீஸ் சமயம் தவிர்த்து... இதுவரை எங்குமே பேட்டி தந்ததில்லை. உங்களையும், தற்போது யூ ட்யூபில் கூசாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் சீனியர் பத்திரிகையாளர்களையும் பற்றி நான் பேசியதும் இல்லை.
 
அதேபோல போலி வசூல் நிலவரம் சொல்லும் Social Media Trackers குறித்தும் நான் பேசியதில்லை.
 
ஆனால் நீங்கள் எல்லோரும் மாஸ் ஹீரோக்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களை குளிர்விக்க உங்கள் பேட்டிகள் மற்றும் ட்வீட்களில் தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வன்மத்தை கக்கி வருகிறீர்கள்.
 
உங்கள் வசதி மற்றும் புகழை ஒப்பிட்டால் நானெல்லாம் ஆளே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இருக்கட்டும். நடப்பது அனைத்தும் நன்மைக்கே.
 
ஆகவே.. வேறு வழியின்றி இன்றுமுதல் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
 
இனி அவ்வப்போது உங்களை போன்றோர் பேசிய வீடியோ ஆதாரங்களை வைத்தே ட்வீட்களை போடுகிறேன்.
 
எது உண்மை என்பதை மக்களின் பார்வைகளையே விட்டு விடுகிறேன்.
 
நீ விஜய் சொம்பு என்று மொக்கை போடுவோர் கவனத்திற்கு...
 
எனது பிகில், பீஸ்ட், வாரிசு விமர்சனங்களை பார்க்கவும்.
 
மீண்டும் சொல்கிறேன். தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை. 
 
ஆகவே.. நீங்கள் வேண்டுமானால் ஜெயிலருக்கு சொம்படித்து விட்டு போங்கள். ஆனால் அதை பிடிக்கவில்லை என்று கூறும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு.
 
தொடர்ந்து வடைகளை சுடுங்கள். ஒருவாரமாவது வேடிக்கை பார்க்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு வடையும் உருவான விதம் பற்றி விவரிக்கிறேன்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால்-ஹரி படத்தின் முக்கிய அப்டேட்...