Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டிய மைக்கேல் வாஹ்ன்… செம்மயாகக் கலாய்தத தமிழ்ப் படம் இயக்குனர்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:37 IST)
இந்திய அணியில் குல்தீப் யாதவ் எடுக்கப்படாதது குறித்து மைக்கேல் வாஹ்ன் கருத்து தெரிவிக்க அவருக்கு தமிழ்ப்படம் இயக்குனர் சி எஸ் அமுதன் கேலியான பதிலை அளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த வெளிநாட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நியர்கள் தலையிட வேண்டாம்’ என்ற குரலில் டிவீட் செய்திருந்தனர். இது இந்திய மக்களை பெரிதும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை நாட்களும் மக்களால் கொண்டாடப்பட்ட இவர்கள் மக்களுக்கு எதிராக பேசுகிறார்களே என்று அவர்களை கேலி செய்தும் ட்ரோல் செய்தும் டிவீட்களை போட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழலபந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எடுக்கப்படாதது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாஹ்ன் ‘இது தனக்கு அதிர்ச்சியளிக்கிறது. குல்தீப்புக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என எனக்கு தெரியவில்லை’ என டிவீட் செய்திருந்தார்.

இந்த டிவிட்டை ரி டிவீட் செய்த தமிழ்ப்படம் இயக்குனர் சி எஸ் அமுதன் ‘எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த டிவீட் இந்திய வீரர்களின் போராட்டத்துக்கு எதிரான கருத்தை கேலி செய்யும் விதமாக இருக்க பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

மீண்டும் மீண்டுமா?... விடுதலை 2 ஷூட்டிங்கைத் தொடங்கும் வெற்றிமாறன்!

சிம்பு & தேசிங் இணையும் படத்தை தயாரிக்கப் போகும் துபாய் தொழிலதிபர்..!

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments