விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று சன்பிக்சர்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், premium large formate என்று அதில் குறிப்பிட்டுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று சன்பிக்சர்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், premium large formate என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
அது குறித்து ரசிகர்கள் இணையதளங்களில் தேடி வருவதால் அது பேசுபொருளாகியுள்ளது.
premium large formate என்பது திரையரங்கில் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த தொழில் நுட்பம் ஆகும். இது ஒரு திரைப்படத்தை சிறந்த முறையில் ஒலிபரப்ப உதவுகிறது. இந்தத் தொழில் நுட்பமானது வசதியான இருக்கை , பெரிய திரையில் (15மீட்டர் மற்றும் அதற்கு மேல்) இவற்றுடன் சிறந்த தரமான படத்தை ஒலிபரப்ப உதவுகிறது.
மேற்கு உலக நாடுகளில் இதுவரை பிரான்ஸ், ஜெர்மனி , இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் உள்ள தியேட்டர்களில் premium large formate என்ற இந்த டெக்னாலனி உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக விஜய்யின் பீஸ்ட் படம் premium large formate என்ற தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ளாது. மேலும் வெறித்தனமாக எக்ஸ்பீரியன்ஸுக்கு ரெடியா நண்பா என சன்பிக்சர்ஸ் இன்று டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.