Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'லியோ' படத்திற்கு சென்சார் சான்றிதழ்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (19:30 IST)
விஜய்யின் 'லியோ' பட படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் படத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படத்தின் சென்சார் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், இன்று விஜய்யின் லியோ படத்திற்கு யு/ஏ (U/A ) சான்றிதழ் சென்சாரிடம் இருந்து கிடைத்துள்ளது.

எனவே லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5    ஆம் தேதி வியாழக்கிழமை  வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாளை டிரைலர்  சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸாக உள்ளது. வரும் 19 ஆம் தேதி  இப்படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments