தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தது என்பதும் தெரிந்ததே
இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் திறக்கப்பட்டால் அதற்கு தயாராக இருக்கும் வகையில் திரையரங்குகள் தயார் செய்யப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசு இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து அரசு இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது
இதனை அடுத்து திரையரங்குகள் திறக்க மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது