Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "Sharwa38"

J.Durai
வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:37 IST)
சார்மிங் ஸ்டார் ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில்,  அசத்தலான படங்களைத் தந்து வருகிறார். தற்போது  பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ளார். அற்புதமான  பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களை தருவதில், பெயர் பெற்ற பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார்.  லட்சுமி ராதாமோகன் வழங்க, கே.கே.ராதாமோகன் ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், தங்களது 15 படைப்பாக, இப்படத்தை, மிக அதிக பொருட்செலவில் மற்றும் அற்புதமான தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக இருக்கும் களத்தில், நடைபெற்ற சம்பவத்தை, அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இது இந்திய திரைத்துறையில் இது வரையிலும் பதிவாகாத வரலாறாக இருக்கும்.
 
#Sharwa38 உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன், இரத்தமும் சதையுமாக தெறிக்கும், ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும். சம்பத் நந்தி மற்றும் ஷர்வாவின் கூட்டணியில், இதுவரையிலான திரைத்துறை வரலாற்றில், இல்லாத புதுமையான படைப்பாக, இந்திய திரையுலகம் கண்டுகொள்ளாத ஒரு வரலாற்றின் கதையைச் சொல்லும் படமாக இருக்கும்.
 
உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான கதை என்பதால்,  பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள், இது ஷர்வா மற்றும் சம்பத் நந்தி இருவருக்கும் முதல் முறையாகும்.
 
சில காலமாக இக்கதையை வெகு கவனத்துடன் உருவாக்கி வரும் இயக்குநர், ஷர்வாவை இதுவரை கண்டிராத புதுமையான கேரக்டரில் இப்படத்தில் காட்டவுள்ளார். ஷர்வா 60 களில் இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக  பயிற்சி எடுத்து வருகிறார்.  படத்தின் அறிவிப்பு போஸ்டர்  ஒரு பாலை நிலத்தில் தீ வெடிப்பதைக் காட்டுகிறது.
 
#Sharwa38 சிறந்த  தொழில்நுட்ப வல்லுநர்களுடன், உயர்தர தொழில்நுட்ப  தரத்துடன் இப்படம் உருவாகிறது. சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். கிரண் குமார் மன்னே கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
 
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். #Sharwa38 திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments