நடிகர் கமல்ஹாசன் கட்சித் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகிறது. அவர் மக்களவைத் தேர்தலில் குறைவான சதவீதமே ஓட்டுகளைப் பெற்றாலும் அவருக்கு முன் கட்சித் தொடங்கியவர்களைக் காட்டிலும் அவர் அதிக ஓட்டுகளைப் பெற்று சாதித்தார்.
தற்போது அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அவர் விரைவில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவடங்களில் வரும் 13 ஆம் தேதிமுதல் 19 ஆம் தேதிவரை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹசன் பிரசாரம் தொடங்கவுள்ளார்.
மேலும், விரைவில் கட்சி தொடங்கி அடுத்தாண்டு வரவுள்ள தேர்தலைச் சந்திக்கவுள்ள ரஜினிக்கு போட்டியாக கமல் இருக்கப்போகிறாரா இல்லை ஊழலை எதிர்க்கும் இருவரும் ஓரணியில் இணைந்து, மூன்றாம் அணி அமைக்கப்போகிறார்களா எனக் கேள்வி எழுகிறது.