தனுஷ் பட இயக்குநருக்கு சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் எழுதியற்காக மிரட்டல் வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கர்ணன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில், இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான முதல் பாடல் கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்திபுராணம் ஆகிய பாடல்கள்வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்திற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கர்ணன் படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதில் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல்நாட்டுப்புறப்பாடலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும், பண்டாரத்தி புராணம் என்ற பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதத்தும் உள்ளதாகவும் கூறி இந்த வார்த்தைகள் இடம்பெறக்கூடாது அதை நீக்கும்வரை கர்ணன் படத்தை அனுமதிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிபாளர் தாணு, திங்க் மியுசிக், மாரில்செல்வராஜ், யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் திரவுபதி முத்தம் என்ற சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம்பெற்றதற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது.