Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா 46 படத்தின் உண்மையான தயாரிப்பாளர் இவரா? ரசிகனை முட்டாள் ஆக்குகிறார்களா படக்குழு?

Advertiesment
சூர்யா

Siva

, புதன், 21 மே 2025 (08:00 IST)
சூர்யா நடிக்கும் 46வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி  இந்த படத்தை இயக்க இருப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தான் என்றும், கங்குவா படத்தின் தோல்வி காரணமாக சூர்யா 46 படத்துக்கு ஏதேனும் பிரச்சனை வரலாம் என்பதற்காக சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பேனரில் அவர் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு வதந்தி கோலிவுட் திரை உலகில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு முற்றிலும் ஸ்தம்பித்து போன ஞானவேல் ராஜா, இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் ஓர் இடத்தை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளரின் உண்மையான பெயரை கூறாமல், டம்மியாக வேறு தயாரிப்பாளரை அறிவித்ததற்கு பிறகு ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
 
"ரசிகனை முட்டாளாக்கும் இந்த வேலை எதற்காக?" என்ற கேள்வி ரசிகர்களிடமிருந்து எழுந்துவருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review