தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும், புதிய தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டமேல்முறையீட்டு மனுவின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் சங்கம் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று அறிவித்து, 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை, நவம்பர் 3 வரை நீட்டிப்பு என இன்று உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் நவம்பர் 3 முதல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது நேரடி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.