பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இவ்விரு படங்கலும் ரசிகர்கல் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் விரைவாக ரூ.100 கோடியை வசூலித்தது என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
இதற்கு போட்டியாக விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 8 நாளில் ரூ.125 கோடியை தொட்டது என்று 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்டுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்தது.
மேலும் விஸ்வாசம் திரையிடப்பட்ட திரையரங்களில் கூடுதல் நாற்காலிகள் போடப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது. இதைதொடர்ந்து இணையவாசி ஒருவர் தமிழ்ப்படம் 2 எவ்வளவு வசூல் செய்தது? என்று கேட்டார்.
இதற்கு சி.எஸ் அமுதன், ஒரே இருக்கையில் இரண்டு, மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டத்தை சமாளிக்க கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் திரையரங்களுக்கு கொண்டு வரப்பட்டதால் அதனை கூறுவது கடினம் என விஸ்வாசத்தை கலாய்ப்பது போன்ரு பதில் அளித்திருந்தார்.