Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'டாடா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (23:17 IST)
கவின் நடிப்பில்  சமீபத்தில் வெளியான டாடா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அதையடுத்து அவர் நடிப்பில் உருவான திரைப்படம் டாடா. இப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார்.

இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இப்படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் எனப் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இப்படத்தின் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments