தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்கைத் தோற்றுவித்த பெருமைக்குரியரும், இந்திய சினிமாவில் மிக மூத்த இயக்குநருமான பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இன்று காலமானார். அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜா இரங்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா.
அதன்பின் அவர் நிழல்கள், சிகப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, வெற்றிக் கொடிகட்டு, ஒரு கைதியின் டைரி, உள்ளிட்ட பல இயக்கி இயக்குநர் இமயமாக வீற்றிருக்கிறார்.
இந்நிலையில அவரது ஆஸ்தான சினிமா ஒளிப்பதிவாளர் திரு.எஸ்.நிவாஸ் இன்று காலமானார்.
சினிமாவில் இயக்குநர்களுக்கு கண்ணாக இருக்கும் ஒளிப்பதிவாளரின் மறைவுக்குப் சினிமாதுறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளதாவது :
என் திரைப் பயணமான
16 வயதினிலே முதல்
தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி,
இந்திய திரை உலகின் மிகச்
சிறந்த ஒளிப்பதிவாளர்,
என் நண்பன் திரு. நிவாஸ்
மறைவு அதிர்ச்சியளிக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள் ... எனப் பதிவிட்டுள்ளார்.