Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டலான மேக்கிங்… பயத்தைக் கொடுக்கும் டிமாண்டி காலணி 2 டிரைலர்!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:01 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதிலும் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய கோப்ரா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

இதையடுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் உருவாகியுள்ளதை டிரைலர் காட்டுகிறது. டிரைலரின் காட்சிகள் பல ரசிகர்களின் பய உணர்வை தூண்டும் விதமாக மிரட்டலான மேக்கிங்கோடு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments