இசையமைப்பாளர் தேவா 90 களில் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்தார். அப்போது அவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார்.
அதில் அஜித்தின் ஆசை திரைப்படமும், ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படமும் அவரின் இசையில் வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தன. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஸ்டைலு ஸ்டைலுதான் என்ற பாடல் சார்ட்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
ஆனால் அந்த பாடல் பாட்ஷா படத்துக்காக கம்போஸ் செய்யப்பட்டது இல்லையாம். அஜித்தின் ஆசை படத்துக்காக தேவாவால் கம்போஸ் செய்யப்பட்டதாம். ஆனால் இயக்குனர் வசந்த் மெலடியான பாடல் வேண்டும் எனக் கேட்டதால் ஆசை படத்தில் மீனம்மா பாடல் இடம்பெற, இந்த பாடல் பாட்ஷா படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை சமீபத்தில் இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.