Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரி & விஷால் படத்தில் இணைந்த பிரபலம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹரி & விஷால் படத்தில் இணைந்த பிரபலம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, சனி, 15 ஜூலை 2023 (08:26 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தபடத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் தேசிங் பெரியசாமி படத்தின் லுக்கா?... சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!