Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் வேட்டையன் படத்தோடு மோதுகிறதா தனுஷ் 50 படம்?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (09:16 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் தனுஷ் சமீபத்தில் நிறைவு செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் டிவிட்டரில் “என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கலாநிதி மாறன் அவர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய நன்றி, என்னுடைய கனவுக்கு துணை நின்றதற்காக” எனக் கூறியுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் அதே தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரஜினி மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் முதல் முறையாக ரிலீஸ் ஆகவுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments