Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (12:18 IST)
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தால் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான் காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியாக 3வது நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கருத்து கூறி வந்தனர்.
 
இப்படத்தை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நஷ்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. 
 
இதன் மூலம் காலா ஒரு தோல்விப்படம் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments