வாழை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிப்பில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பானுக்கு சென்று வந்தார்.
பைசன் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவர்கள் இருவரும் மாரி 2 படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.