பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.
படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் அங்கு இளையராஜாவின் சிம்ஃபொனி இசை கச்சேரி தமிழக அரசு சார்பில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இட்லி கடை இசை நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.