நடிகர் தனுஷின் சம்பளம் 50 கோடி என டிவிட்டர்வாசிகள் கிளப்பிவிட அது இப்போது அங்கே விவாதப் பொருளாக அமைந்துள்ளது.
தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஏற்கனவே பல படங்களைக் கையில் வைத்திருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் கமிட்டாகக் காரணம் இந்த படத்துக்காக மொத்தமாக தனுஷுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் இப்போது 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாக உருவாக உள்ளதால் அதனால் தயாரிப்பாளருக்கு மேலதிக வருமானம் வரும் என்பதால் கூடுதலாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இது தெரியாமல் டிவிட்டரில் தனுஷ் சம்பளம் 50 கோடி ரூபாய் என யாரோ கிளப்பிவிட்டுள்ளனர்.