Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை ட்வீட் செய்த நடிகர் தனுஷ்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (17:18 IST)
இந்த தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக வெளியாகியது. இப்படத்துடன் மேயாத மான், சென்னையில் ஒரு  நாள் 2, கொடிவீரன், போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெளியானது. இந்த படங்களும் மக்களின் பேராதரவை பெற்று  வருகிறது.

 
இந்நிலையில் நடிகர் தனுஷ் மேயாத மான் படம் பார்த்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் படம் சூப்பர், இப்படி நான்  சிரித்து பல நாட்கள் ஆகிறது என்று டுவீட் செய்துள்ளார். அதோடு படக்குழு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை  கூறியுள்ளார்.



 
பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு   நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'. ரத்தின குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா ஷங்கர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிள்ளது.
 
இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments