Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட தனுஷ்… ஆனால் நடந்தது இதுதான்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:49 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிடுகிறார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலிஸூக்கு காத்திருக்கிறது. படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த நேர்காணலில் “அந்தாதூன் படம் தனுஷுக்கு ரொம்ப பிடித்தது. அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டார். இதற்காக நான் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் ரீமேக்குக்கு 5 கோடி ரூபாயும், லாபத்தில் 25 சதவீதம் பங்கும் கேட்டனர். இதனால் லாபத்தின் பெரும்பகுதி அவர்களுக்கே செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால் நான் அந்த படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்.. முத்தங்களை பரிமாறி கொண்ட நயன்தாரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments