Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

Advertiesment
ஜி வி பிரகாஷ்

vinoth

, புதன், 2 ஏப்ரல் 2025 (07:53 IST)
2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து அவர்களின் விவாகரத்து சம்மந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜி வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவருமே தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து இது சம்மந்தமாக பரவி வரும் தகவல்களுக்கு தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி. தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ’தொடர்ந்து எனக்கு எந்த சம்மந்தமில்லாத ஒரு குடும்ப விஷயத்தில் என் பெயர் இழுக்கப்பட்டு வருகிறது. ஜி வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்தில் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் திருமணம் ஆன நபரையோ அல்லது ஒரு நடிகரையோ நான் ‘டேட்’ செய்ய மாட்டேன்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!