Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா இயக்குனரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (08:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார்.

படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்குப் பிறகு இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

பூஜா ஹெக்டேவின் அழகிய புகைப்பட தொகுப்பு!

வித்தியாசமான உடையில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments