கார்த்திக் நரேன் தனது படங்களில் அம்பேத்கரை இழிவு செய்வதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
நேற்று கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவான மாஃபியா திரைப்படம் வெளியானது. கதையே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள படம் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் படத்தின் மீது அரசியல் ரீதியாக ஒரு விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.
அவர் தன்னுடைய முதல்படமான துருவங்கள் 16 –ல் வில்லன் வசிக்கும் இடத்துக்கு அம்பேத்கர் நகர் எனப் பெயர் வைத்திருப்பார். ஆனால் தமிழகத்தில் அவ்வளவு வசதியாக் மாளிகை போன்ற வீடுகள் இருக்கும் எந்த பகுதிக்குமே அந்த பெயர் வைக்கப்பட்டதில்லை. உழைக்கும் மக்களும் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் பகுதிகளிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் வாழும் பகுதிகள்தான் அம்பேத்கர் பெயரைத் தாங்கி நிற்பவை. இது சம்மந்தமாக அந்த பட ரிலீஸின் போதே சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் மாஃபியா படத்திலும் அது போல ஒரு காட்சியை அவர் வைத்துள்ளார். வில்லன் தனது போதைப் பொருட்களை பதுக்கும் ஏரியாவில் அம்பேத்கரின் படம் இடம்பெற்று இருக்கும். இதனால் அவர் தொடர்ந்து அம்பேத்கரை இழிவு செய்கிறார் என முகநூலில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.