Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வருடங்களில் ரூ.1000 கோடி: டிஜிட்டல் நிறுவனங்களின் வருமானமா?

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (18:54 IST)
தமிழ் திரையுலகம் தற்போது பயங்கர சிக்கலில் உள்ளது. ஒருபக்கம் ஆன்லைன் பைரஸி பிரச்சனை, ரிலீஸ் ஆன தினமே ஆன்லைனில் படம் வெளிவந்துவிடுகிறது, இன்னொரு பக்கம் பெய்டு டுவிட்டர்கள், காசு கொடுக்காவிட்டால் இடைவேளையின்போதே படம் மொக்கை என்றும் காசு கொடுத்தால் சூப்பர் என்றும் பதிவுகள் போட்டு வருகின்றனர்,

இந்த நிலையில் ஜிஎஸ்டி, கியூப் கட்டணங்கள் உயர்வு, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு, நடிகர்களின் சம்பள உயர்வு என திரைத்துறையே தற்போது தள்ளாட்டம் போட்டு வருகிறது

இந்த நிலையில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கார்ப்பரேட் டிஜிட்டல் நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.1000 கோடி சினிமாக்காரர்களை வைத்து சம்பாதித்துள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ். அவர் கூறியதாவது: திரைப்படங்களை திரையிட வாரந்தோறும் சுமார் 9000ம் முதல் 12000ம் ரூபாய் வரை ஒவ்வொரு தியேட்டருக்கும் பணம் செலுத்தியது எங்கள் தயாரிப்பாளர்களே. வருடத்துக்கு தமிழ்நாட்டில், உள்ள 1100 தியேட்டர்களிலிருந்தும் 12 வருடங்களில் சுமார் 600 கோடி பணத்தை டிஜிட்டல் (12000 x 52 x 1100) நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன. விளம்பரம் திரையிடல் மூலம் 400 கோடி, ஆக 1000 கோடியை எங்கள் மூலம் சம்பாதித்த டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம், தர்மத்துக்கு புறம்பானது' என்று கூறியுள்ளார். இந்த கணக்கை பார்க்கும்போது தலைசுற்றுவதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments